< Back
மும்பை
புனே ரெயிலில் கடத்தப்பட்ட ரூ.5½ கோடி தங்க கட்டிகள் பறிமுதல்; 2 பயணிகள் கைது
மும்பை

புனே ரெயிலில் கடத்தப்பட்ட ரூ.5½ கோடி தங்க கட்டிகள் பறிமுதல்; 2 பயணிகள் கைது

தினத்தந்தி
|
15 Oct 2023 12:30 AM IST

புனே ரெயிலில் கடத்தப்பட்ட ரூ.5 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

நாக்பூர்,

புனே ரெயிலில் கடத்தப்பட்ட ரூ.5 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

தங்கம் கடத்தல்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து புனேவுக்கு வந்த ஆசாத் ஹிந்த் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்- 12130) தங்கம் கடத்தப்படுவதாக நாக்பூர் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று முன்தினம் நாக்பூர் ரெயில் நிலையத்திற்கு அதிகாரிகள், ரெயில்வே போலீசாருடன் சென்றனர். அங்கு பிளாட்பாரம் 8-ல் வந்த ஆசாத் ஹிந்த் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி தீவிர சோதனை போட்டனர்.

பறிமுதல்

அப்போது எஸ் 4 பெட்டியில் பயணம் செய்த ராகுல் (வயது36), பாலுராம் (41) ஆகிய 2 பேரின் உடைமைகளை சோதனை போட்டனர். இந்த சோதனையில் அவர்களது பைகளில் 9 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இவற்றின் மதிப்பு ரூ.5 கோடியே 40 லட்சம் ஆகும். இதையடுத்து போலீசார் 2 பேரையும் பிடித்து கைது செய்தனர். இது குறித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தங்க கட்டிகள் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்