< Back
மும்பை
அதிக வருமானம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.26 லட்சம் அபேஸ்
மும்பை

அதிக வருமானம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.26 லட்சம் அபேஸ்

தினத்தந்தி
|
29 Sept 2022 4:30 AM IST

தானேயை சேர்ந்த பெண் ஒருவரிடம் அதிக வருமானம் தருவதாக கூறி ரூ.26 லட்சம் அபேஸ்

தானே,

தானேயை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தனக்கு கிடைத்த பணத்தை நிரந்தர வைப்புத்தொகையில் செலுத்த வங்கிக்கு சென்றார். வங்கியில் இருந்த ஊழியர் ஒருவர் தனியார் காப்பீடு திட்டத்தில் 10 வருடத்திற்கு பணம் செலுத்தினால் ரூ.38 லட்சம் வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை தெரிவித்தார். இதனை நம்பிய அப்பெண் கடந்த 2 ஆண்டாக பணத்தை செலுத்தி உள்ளார். பணம் செலுத்தப்பட்ட ஆவணங்களில் ரூ.38 லட்சம் பெறுவதற்கான விதிமுறைகள் இல்லாததை கண்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் காப்பீடு நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். இதில் அவருடன் பேசிய ஒருவர் உதவி செய்வதாக கூறி கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரையில் செலுத்தப்பட்ட ரூ.26 லட்சத்தை அபேஸ் செய்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்