< Back
மும்பை
விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்ட ரூ.2.23 கோடி கஞ்சா செடிகள் பறிமுதல்
மும்பை

விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்ட ரூ.2.23 கோடி கஞ்சா செடிகள் பறிமுதல்

தினத்தந்தி
|
24 Sept 2023 1:30 AM IST

விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்ட ரூ.2.23 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது

ஜல்னா,

ஜல்னா மாவட்டத்தில், போகர்தான் தாலுகா கல்யாணி கிராமத்தில் விவசாய நிலத்தில் கஞ்சா செடிக்கள் சட்டவிரோதமாக வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊரக போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அந்த விவசாய நிலத்திற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது அங்கிருந்து சுமார் 725 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டன. இந்த ஒவ்வொரு செடியும் 4 முதல் 5 கிலோ எடை கொண்டதும், 8 முதல் 10 அடி உயரம் கொண்டதுமாக இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 2 கோடியே 23 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட கவுஸ்கான் பதான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். ஜல்னாவில் சட்டவிரோதமாக கஞ்ச பயிரிடப்படுவதை தடுக்க போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்