அஜித்பவாருடன் ரோகித் பவார் திடீர் சந்திப்பு
|துணை முதல்-மந்திரி அஜித்பவாரை ரோகித் பவார் திடீரென சந்தித்து பேசினார்.
மும்பை,
துணை முதல்-மந்திரி அஜித்பவாரை ரோகித் பவார் திடீரென சந்தித்து பேசினார்.
ரோகித் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் சமீபத்தில் சிவசேனா-பா.ஜனதா கூட்டணி அரசில் தனது கட்சி சகாக்களுடன் இணைந்ததுடன், துணை முதல்-மந்திரியாகி உள்ளார். ஆனால் சரத்பவார் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. அஜித்பவார் பெரியப்பா மகனும், கர்ஜத்- ஜாம்கேட் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோகித் பவார் சரத்பவார் அணியில் உள்ளார்.
திடீர் சந்திப்பு
இந்தநிலையில் நேற்று சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரின் போது துணை முதல்-மந்திரி அஜித்பவாரை, ரோகித்பவார் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சட்டசபை வளாகத்தில் உள்ள துணை முதல்-மந்திரியின் அறையில் நடந்தது. ரோகித்பவார் எம்.எல்.ஏ. தனது தொகுதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக துணை முதல்-மந்திரியை சந்தித்ததாக கூறப்படுகிறது.