< Back
மும்பை
மும்பை
பால்கர் ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு
|8 Sept 2022 9:56 PM IST
மேற்கு ரெயில்வே பால்கர் ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு
வசாய்,
மேற்கு ரெயில்வே பால்கர் ரெயில் நிலைய பிளாட்பாரம் 1-ம் நம்பர் பகுதியில் கடந்த 6-ந்தேதி இரவு 11.30 மணி அளவில் 25 வயது பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று அதிவேகமாக வந்தது. இருப்பினும் பிளாட்பாரத்தின் ஓரமாக நடந்து சென்ற அப்பெண் நகராமல் நடந்து சென்றதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பெண் போலீசார் கண்டார். உடனே அப்பெண்ணை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றார்.
இது தொடர்பாக பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பார்வை குறைபாடு உள்ள பெண் எனவும், கணவருடன் ஏற்பட்ட சண்டையில் மனஉளைச்சல் காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அப்பெண்ணிற்கு கவுன்சிலிங் வழங்கி, உறவினர்களை வரவழைத்து ஒப்படைத்தனர்.