< Back
மும்பை
அஜந்தா குகை பகுதியில் செல்பி எடுத்த போது நீர்வீர்ழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு
மும்பை

அஜந்தா குகை பகுதியில் செல்பி எடுத்த போது நீர்வீர்ழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு

தினத்தந்தி
|
25 July 2023 12:45 AM IST

அவுரங்காபாத்தில் அஜந்தா குகை பகுதி அருகே உள்ள நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற போது தவறி விழுந்த வாலிபர் மீட்கப்பட்டார்

மும்பை,

அவுரங்காபாத்தில் உள்ள சோயேகாவ் தாலுகா நந்ததந்தா பகுதியை சேர்ந்தவர் கோபால் சவான் (வயது30). இவர் நேற்று முன்தினம் அங்குள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமான அஜந்தா குகைக்கு நண்பர்களுடன் சென்றார். வாலிபர் குகையை பார்த்த பிறகு, அருகில் உள்ள அஜந்தா வீவ்பாயின்ட் பகுதியில் உள்ள சப்தகுந்தா நீர்வீழ்ச்சிக்கு சென்றார். அங்கு அவர் செல்பி எடுக்க முயன்ற போது கால் தவறி விழுந்தார். நீர்வீழ்ச்சி தடாகத்தில் விழுந்த வாலிபர் அங்குள்ள கல்லை பிடித்து தத்தளித்து கொண்டு இருந்தார். வாலிபரின் நண்பர்கள் சம்பவம் குறித்து அங்குள்ள ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தண்ணீரில் தத்தளித்த வாலிபரை மீட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்