பெண்ணை பலாத்காரம் செய்து பணம் பறிப்பு; சமூகவலைதளத்தில் அறிமுகமான ஆசாமிக்கு வலைவீச்சு
|பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு பணத்தை பறித்த ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
மும்பை,
மும்பை வக்கோலா பகுதியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு சமூகவலைத்தளம் மூலமாக சம்பாஜிநகரை சேர்ந்த சமீர் சலீம் என்ற நபரின் அறிமுகம் கிடைத்தது. நாளடைவில் செல்போன் நம்பர் மூலம் பேசி வந்த நிலையில் தன்னை சந்திக்க சம்பாஜி நகருக்கு வருமாறு சமீர் சலீம் அழைப்பு விடுத்தார். முதலில் வர மறுத்த அப்பெண்ணிடம் வராவிட்டால் கழுத்தில் கத்தியால் குத்தி தற்கொலை செய்ய போவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அப்பெண் கடந்த 1-ந் தேதி சம்பாஜிநகருக்கு சென்றார். அங்கு சமீர் சலீம் அப்பெண்ணை ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை வீடியோவாக பதிவு செய்து அப்பெண்ணை மிரட்டி ரூ.70 ஆயிரம், செல்போனை பறித்து உள்ளார். பாதிக்கப்பட்ட அப்பெண் நேற்று முன்தினம் மும்பை திரும்பி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் பலாத்காரம் செய்து பணம் பறித்த சமீர் சலீம் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.