< Back
மும்பை
வாட்ஸ்அப்பில் அழகிகள் படத்தை அனுப்பி விபசாரம் - 2 பேர் கைது
மும்பை

'வாட்ஸ்அப்'பில் அழகிகள் படத்தை அனுப்பி விபசாரம் - 2 பேர் கைது

தினத்தந்தி
|
20 Aug 2023 12:45 AM IST

போரிவிலியில் ‘வாட்ஸ்அப்’பில் அழகிகள் படத்தை அனுப்பி விபசாரம் நடத்திய 2 பேர் கைது செய்யபட்டனர்

மும்பை,

மும்பை போரிவிலி சஞ்சய் காந்தி பூங்கா அருகே வாட்ஸ்அப் மூலம் விபசாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். அங்கு சந்தேகப்படும்படி சென்ற காரை வழிமறித்தனர். காரில் இருந்த 3 பெண்கள் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் 3 பெண்களும் விபசார அழகிகள் என்பதும், மற்ற 2 பேர் விபசார தொழில் நடத்துபவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் வாட்ஸ்அப் மூலம் பெண்களின் புகைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி விபசார தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபசார தொழில் செய்து வந்த 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 3 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைதானவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், கார் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்