< Back
மும்பை
மும்பை
மதுபான விடுதியில் ஆபாசம்: 22 பெண்கள் உள்பட 34 பேர் மீது வழக்குப்பதிவு
|11 Aug 2023 2:30 AM IST
தானேயில் உள்ள மதுபான விடுதியில் ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்டதாக 22 பெண்கள் உள்பட 34 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
மும்பை,
தானே மாவட்டம் பிவண்டி தாலுகாவில் ரஹ்னால் கிராமத்தில் உள்ள மதுபான விடுதியில் ஆபாச நடவடிக்கைகள் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு 9.45 மணி அளவில் அந்த மதுபான விடுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், அங்கு ஆபாச செயல்கள் நடந்து வருவது கண்டுப்பிடிக்கப்பட்டது.
ஆண்களும், பெண்களும் இசைக்கு ஏற்ப ஆபாசமாக நடனமாடி உள்ளனர். இதையடுத்து அங்கு இருந்த மதுபான விடுதி பெண் ஊழியர்கள் 22 பேர், உரிமையாளர், 2 மேலாளர்கள் மற்றும் 9 வாடிக்கையாளர் என 34 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும் யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.