< Back
மும்பை
கலினா நடன பாரில் போலீசார் அதிரடி சோதனை
மாவட்ட செய்திகள்
மும்பை

கலினா நடன பாரில் போலீசார் அதிரடி சோதனை

தினத்தந்தி
|
26 May 2022 10:36 PM IST

கலினா நடன பாரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

மும்பை,

மும்பை சாந்தாகுருஸ் கலினா பகுதியில் உள்ள புஸ்பக் என்ற நடனபாரில் ஆபாச நடவடிக்கைகள் நடந்து வருவதாக வகோலா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு சட்டவிரோதமாக 8 பெண்களை பணியில் அமர்த்தி ஆபாசமான செயல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கிருந்த 11 ஊழியர்கள் உள்பட 31 பேரை பிடித்து கைது செய்தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் நடனபாரின் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்