< Back
மும்பை
ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
மும்பை

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

தினத்தந்தி
|
22 Sept 2022 1:00 AM IST

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

தானே,

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

லஞ்சம்

நவிமும்பை நெடுஞ்சாலை பாதுகாப்பு படையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராம்சந்திரா. இவரிடம் 2 போலீசார் அணுகி தங்களுக்கு பணி இடமாறுதல் வாங்கி தரும்படி கேட்டு கொண்டனர். இதற்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் லஞ்சம் தந்தால் இடமாறுதல் வாங்கி தருவதாக கூறினார்.

பணம் தருவதாக கூறிய 2 பேரும் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தனர்.

கைது

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் யோசனைப்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்சந்திராவிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்தனர். இதனை பெற்றபோது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்து கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்