< Back
மும்பை
காபி மேக்கரில் மறைத்து 3½ கிலோ தங்கம் கடத்திய பயணி கைது - நாக்பூர் விமான நிலையத்தில் சிக்கினார்
மும்பை

காபி மேக்கரில் மறைத்து 3½ கிலோ தங்கம் கடத்திய பயணி கைது - நாக்பூர் விமான நிலையத்தில் சிக்கினார்

தினத்தந்தி
|
30 Sept 2023 12:30 AM IST

காபி மேக்கரில் 3½ கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்த பயணி நாக்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்

நாக்பூர்,

நாக்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் இருந்து நேற்று விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் பயணி ஒருவர் வைத்திருந்த காபி மேக்கரை பிரித்து பார்த்தபோது, அதில் 3 கிலோ 497 கிராம் எடை கொண்ட தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 10 லட்சம் ஆகும். இதையடுத்து சம்பந்தப்பட்ட பயணியை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்