< Back
மும்பை
ஷரியா சட்டத்தை எதிர்ப்பது மட்டுமே பொது சிவில் சட்டத்தின் அடிப்படை அல்ல - உத்தவ் சிவசேனா சொல்கிறது
மும்பை

ஷரியா சட்டத்தை எதிர்ப்பது மட்டுமே பொது சிவில் சட்டத்தின் அடிப்படை அல்ல - உத்தவ் சிவசேனா சொல்கிறது

தினத்தந்தி
|
30 Jun 2023 6:45 PM GMT

ஷரியா சட்டத்தை எதிர்ப்பது மட்டுமே பொது சிவில் சட்டத்திற்கு அடிப்படை இல்லை என உத்தவ் சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

ஷரியா சட்டத்தை எதிர்ப்பது மட்டுமே பொது சிவில் சட்டத்திற்கு அடிப்படை இல்லை என உத்தவ் சிவசேனா கூறியுள்ளது.

பொது சிவில் சட்டம்

மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முடிவில் உள்ளது. சமீபத்தில் இதுகுறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இரண்டு விதமான சட்டங்களால் நாட்டை நடத்த முடியாது. எனவே இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம்" என்று வலியுறுத்தி இருந்தார். இதுகுறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தங்கள் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறி இருப்பதாவது:-

ஷரிய சட்டம்

முஸ்லிம்களின் ஷரியா சட்டத்தை மட்டும் எதிர்ப்பது பொது சிவில் சட்டத்தின் அடிப்படை இல்லை. சட்டம் மற்றும் நீதியில் சமத்துவத்தை வழங்குவதே பொது சிவில் கோட்பாடு ஆகும். ஆளும்கட்சியில் அங்கம் வகிக்கும் மந்திரிகள், ஊழல்வாதிகள், தொழில் அதிபர்கள் பாதுகாக்கப்படுவதும், எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருவதும் என்ன மாதிரியான சட்டம்?.

தகுதி நீக்கம் செய்யுங்கள்...

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 40 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து ஒரே மாதிரியான சட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முதலில் மதிக்க வேண்டும். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லம் புதுப்பிக்கப்பட்ட செலவில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சி.ஏ.ஜி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மராட்டியத்தில் சில நிலப்பிரபுக்கள் 2 முதல் 4 அதிகாரப்பூர்வ பங்களாக்களை வைத்துக்கொண்டு உல்லாசமாக வாழ்கின்றனர். இவற்றிலும் ஒரே மாதிரியான பொதுவான சட்டத்தை கொண்டுவர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்