< Back
மும்பை
மும்பை

சுன்னாப்பட்டியில் சிமெண்ட் கலவை லாரி மோதி ஒருவர் பலி - 2 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
10 July 2023 1:00 AM IST

சுன்னாப்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் கலவை லாரி மோதி ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பை,

சுன்னாப்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் கலவை லாரி மோதி ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி மோதி விபத்து

மும்பை சுன்னாப்பட்டியில் நேற்று காலை சிமெண்ட் கலவை லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக சென்றது. பின்னர் அங்கு நிறுத்தி இருந்த பி.யூ.சி. வேன் மற்றும் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிமெண்ட் கலவை லாரி ஒரு புறமாக சாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் அங்கு நின்றிருந்த 3 பேர் படுகாயமடைந்தனர்.

ஒருவர் பலி

தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவண்டியை சேர்ந்த அப்துல் சலாம்(வயது38) என்பவர் பலியானார். மற்ற 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரி மோதிய விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள், பி.யூ.சி. வேன் முற்றிலும் சேதமடைந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். விடுமுறை தினம் என்பதால் நேற்று அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்