< Back
மும்பை
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அரசு சார்பில் மனித பிரமிடு போட்டி - 31-ந் தேதி நடக்கிறது
மும்பை

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அரசு சார்பில் 'மனித பிரமிடு' போட்டி - 31-ந் தேதி நடக்கிறது

தினத்தந்தி
|
20 Aug 2023 1:00 AM IST

மராட்டிய அரசு சார்பில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவிந்தாக்களுக்கு மனித பிரமிடு அமைக்கும் போட்டி வருகிற 31-ந் தேதி நடத்தப்படுகிறது.

மும்பை,

மராட்டிய அரசு சார்பில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவிந்தாக்களுக்கு மனித பிரமிடு அமைக்கும் போட்டி வருகிற 31-ந் தேதி நடத்தப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

மராட்டியத்தில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் மும்பை, தானேயில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் களைகட்டும். நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு கோவிந்தாக்கள் மனித பிரமிடு அமைத்து தயிர் பானையை உடைத்து அசத்துவார்கள்.

மாநில அரசு சார்பில் போட்டி

இந்தநிலையில் இந்த ஆண்டு மாநில அரசு சார்பில் கோவிந்தாக்களுக்கான மனித பிரமிடு அமைக்கும் போட்டி நடத்தப்பட உள்ளது. மனித பிரமிடு அமைக்கும் போட்டி வருகிற 31-ந் தேதி ஒர்லியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.11 லட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் இதுதொடர்பாக மந்திரி உதய் சமந்த் கூறுகையில், " மனித பிரமிடு அமைத்தல் மாநில அரசால் வீரதீர விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் மனித பிரமிடு அமைக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்து உள்ளோம். சர்வதேச அளவில் இந்த போட்டியை எடுத்து செல்ல விரும்புகிறோம்" என்றார்.

மேலும் செய்திகள்