< Back
மும்பை
ஜெய் ஸ்ரீராம் என கூறுமாறு கூரியர் நிறுவன ஊழியர் மீது சரமாரி தாக்குதல் - 4 பேர் கைது
மும்பை

'ஜெய் ஸ்ரீராம்' என கூறுமாறு கூரியர் நிறுவன ஊழியர் மீது சரமாரி தாக்குதல் - 4 பேர் கைது

தினத்தந்தி
|
21 Aug 2023 1:00 AM IST

‘ஜெய் ஸ்ரீராம்’ என கூறுமாறு கூரியர் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

'ஜெய் ஸ்ரீராம்' என கூறுமாறு கூரியர் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதல்

மும்பை காட்கோபர் கிழக்கு ராமாபாய் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாகித் கான்(வயது34). கூரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 18-ந்தேதி நள்ளிரவு 1 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மஜித் பந்தர் அருகே வந்தபோது, அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து சிகரெட் பற்ற வைக்க லைட்டர் கேட்டார். அவர் லைட்டரை கொடுத்தபோது திருப்பி தரவில்லை. மேலும் அந்த வாலிபர் செல்போனில் 3 பேரை அங்கு வரவழைத்தார். பின்னர் 4 பேரும் சேர்ந்து சாகித் கானை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி 'ஜெய் ஸ்ரீராம்' என கூறும்படி தெரிவித்தனர்.

4 பேர் கைது

முகம், தலை, தோள்பட்டை, வயிறு பகுதிகளில் தாக்கியதால் ரத்த வெள்ளத்தில் சாகித் கான் படுகாயமடைந்தார். பின்னர் அவர்களிடம் இருந்து தப்பிவந்த அவர், நடந்த சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், சாகித் கானை தாக்கிய ஜெத்தின், மால்டோ, மகிந்தர், விஷால் ஆகிய 4 பேரின் அடையாளம் தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் இரவு அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்