< Back
மும்பை
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
மும்பை

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

தினத்தந்தி
|
7 Oct 2023 12:15 AM IST

முர்பாத் தாலுகாவில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார்

தானே,

தானே மாவட்டம் முர்பாத் தாலுகாவில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்து வருபவர் சுதிர் பாண்டுரங்(வயது54). அதே தாலுகாவை சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் முர்பாத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்ய தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்ய வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதற்கு அதிகாரி ரூ.70 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். அதிகாரியிடம் நடத்திய பேரத்தில் ரூ.50 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டார். இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் கொடுத்த யோசனைப்படி தாலுகா அலுவலகத்தில் இருந்த அதிகாரி சுதிர் பாண்டுரங்கை அந்த நபர் சந்தித்தார். அவரிடம் லஞ்ச பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்து கைது செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்