< Back
மும்பை
அனுமதியின்றி மண் அள்ளிய தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. ஏக்நாத் கட்சேக்கு ரூ.137 கோடி அபராதம்
மும்பை

அனுமதியின்றி மண் அள்ளிய தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. ஏக்நாத் கட்சேக்கு ரூ.137 கோடி அபராதம்

தினத்தந்தி
|
20 Oct 2023 1:15 AM IST

சொந்த நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. ஏக்நாத் கட்சேக்கு ரூ.137 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

சொந்த நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. ஏக்நாத் கட்சேக்கு ரூ.137 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி மண் அள்ளினார்

பா.ஜனதா கட்சியில் 40 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர் ஏக்நாத் கட்சே. இவர் 2020-ல் பா.ஜனதாவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் சேர்ந்தார். தற்போது ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி.யாக உள்ளார். அவரது மருமகள் ரக்சா கட்சே பா.ஜனதா எம்.பி.யாக உள்ளாா். இந்தநிலையில் ஜல்காவ் மாவட்டம் முக்தாய்நகர் தாலுகா தாசில்தார் ஏக்நாத் கட்சே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஏக்நாத் கட்சே மற்றும் அவரது மனைவி மந்தகினி, மகள் ரோகிணி, மருமகள் ரக்சா கட்சேவுக்கு சொந்தமான இடத்தில் இருந்து அரசின் அனுமதியின்றி மண், கருங்கல் வெட்டி அள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ரூ.137 கோடி அபராதம்

சட்டவிரோதமாக மண், கருங்கல் அள்ளியதற்காக 15 நாளில் ரூ.137 கோடியே 14 லட்சத்து 81 ஆயிரத்து 883 அபராதம் கட்ட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. அனுமதியின்றி சொந்த நிலத்தில் இருந்து மண் அள்ளியதற்காக ஏக்நாத் கட்சே மற்றும் குடும்பத்தினருக்கு ரூ.137 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்