< Back
மும்பை
வசாய் அருகே கோடரியால் வெட்டி தாய் கொலை; நடத்தையில் சந்தேகப்பட்டு மகன் வெறிச்செயல்
மும்பை

வசாய் அருகே கோடரியால் வெட்டி தாய் கொலை; நடத்தையில் சந்தேகப்பட்டு மகன் வெறிச்செயல்

தினத்தந்தி
|
23 Aug 2023 12:30 AM IST

வசாய் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு தாயை கோடரியால் வெட்டி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனா்.

மும்பை,

வசாய் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு தாயை கோடரியால் வெட்டி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனா்.

நடத்தையில் சந்தேகம்

பால்கர் மாவட்டம் வசாய் அருகே உள்ள தேபிவிலி கிராமத்தை சேர்ந்தவர் சுனிதா(வயது36). மாஜ்விலி- தேபிவிலி கிராம பஞ்சாயத்து உறுப்பினர். இவரது கணவர் சுனில். இவர்களுக்கு வைபவ் என்ற மகன் உள்ளான். நேற்று முன்தினம் இரவு சுனில் வேலைக்கு சென்று இருந்தார். இரவு 10.30 மணியளவில் வைபவ் சாப்பிட்டு கொண்டு இருந்தார். சாப்பிடும் போது சுனிதா செல்போனை பயன்படுத்தி கொண்டு இருந்ததாக தெரிகிறது. எந்த நேரமும் செல்போனில் மூழ்கி கிடப்பதால், தாய் சுனிதா தனது தந்தைக்கு துரோகம் செய்துவிட்டு வேறு நபருடன் தொடர்பில் இருப்பதாக வைபவ் சந்தேகப்பட்டார். எனவே அவர் தாயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கோடரியால் வெட்டி கொலை

சண்டை முடிந்த பிறகு சுனிதா தூங்கிவிட்டார். எனினும் ஆத்திரம் தீராத வைபவ் வீட்டில் இருந்த கோடரியை எடுத்து சுனிதாவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றார். இந்தநிலையில் வேலை முடிந்து வந்த சுனில், மனைவி சுனிதா ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் மனைவியை பிவண்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சுனிதாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்தையில் சந்தேகப்பட்டு தாயை கொலை செய்த மகன் வைபவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்