< Back
மும்பை
தானேயில் கத்தியால் தாக்கியதில் தாய்-மகள் படுகாயம்- வாலிபர் கைது
மும்பை

தானேயில் கத்தியால் தாக்கியதில் தாய்-மகள் படுகாயம்- வாலிபர் கைது

தினத்தந்தி
|
25 Sept 2022 7:45 AM IST

தானே கோட்பந்தர் சாலை பகுதியில் கத்தியால் தாக்கியதில் தாய்-மகள் படுகாயம்

தானே,

தானே கோட்பந்தர் சாலை பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் வீட்டுக்கு அவரது ஆண் நண்பரான சுரேஷ் வடேக்கர் (22) கடந்த 22-ந் தேதி காலை 9.45 மணி அளவில் வந்தார். அங்கிருந்த இளம்பெண்ணின் தாயுடன் பேசி கொண்டிருந்த சுரேஷ் வடேக்கர் தனது வீட்டில் இளம்பெண்ணுடன் தங்கி கொள்ளும்படி தெரிவித்தார். இதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்து உள்ளார். ஆத்திரமடைந்த அவர் சமையல் அறையில் இருந்த கத்தியை கொண்டு இளம்பெண்ணை தாக்கினார். இதனை கண்ட அவரது தாய் தடுக்க முயன்ற போது அவரையும் தாக்கி உள்ளார். இதனால் தாய்-மகள் 2 பேரும் படுகாயமடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் சுரேஷ் வடேக்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்