< Back
மும்பை
எம்.எல்.ஏ. காணாமல் போனதாக மனைவி போலீசில் புகார்
மாவட்ட செய்திகள்
மும்பை

எம்.எல்.ஏ. காணாமல் போனதாக மனைவி போலீசில் புகார்

தினத்தந்தி
|
21 Jun 2022 11:15 PM IST

எம்.எல்.ஏ. காணாமல் போனதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

மும்பை,

சிவசேனா தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குஜராத் மாநிலம் சூரத் ஓட்டலில் தங்கி உள்ளனர். இதில் எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினரே அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் அகோலாவில் உள்ள பாலாப்பூர் தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ. நிதின் தேஷ்முக்கை காணவில்லை என அவரது மனைவி பிரன்ஜாலி தேஷ்முக் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து அவர் அகோலா சிவில் லைன்ஸ் போலீசில் அளித்த புகாரில் நேற்று ம இரவு முதல் அவரது கணவர் நிதின் தேஷ்முக்கை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.

இதற்கிடையே குஜராத் சென்ற நிதின் தேஷ்முக் எம்.எல்.ஏ. உடல் நல பாதிப்பு காரணமாக சூரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்