< Back
மும்பை
மராட்டியத்தில் சர்ச்சையில் சிக்கிய 3 பேருக்கு மந்திரி பதவி
மும்பை

மராட்டியத்தில் சர்ச்சையில் சிக்கிய 3 பேருக்கு மந்திரி பதவி

தினத்தந்தி
|
9 Aug 2022 10:24 PM IST

மராட்டியத்தில் சர்ச்சையில் சிக்கிய 3 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.

மும்பை,

சர்ச்சையில் சிக்கிய 3 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.

இளம்பெண் தற்கொலை வழக்கு

மராட்டியத்தில் இன்று நடந்த மந்திரி சபை விரிவாக்கத்தில் 18 பேர் பதவி ஏற்றனர். இதில் 3 பேர் சர்ச்சையில் சிக்கியவர்கள் ஆவர். உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் ஆட்சியில் வனத்துறை மந்திரியாக இருந்தவர் சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ரதோட். புனேயில் பூஜா சவான் என்ற இளம்பெண் தற்கொலை வழக்கில் சஞ்சய் ரதோடுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜனதா குற்றம்சாட்டியது. மேலும் இதுதொடர்பாக பல ஆடியோக்கள் வெளியாகின. இதன் காரணமாக சஞ்சய் ரதோட் ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில் அவர் பா.ஜனதா அங்கம் வகிக்கும் ஆட்சியில் மந்திரியாக பொறுப்பேற்று உள்ளார். சஞ்சய் ரதோட் மந்திரியாக நியமிக்கப்பட்டதற்கு பா.ஜனதா துணை தலைவர் சித்ரா வாக் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " சஞ்சய் ரதோட் மந்திரி சபையில் இணைக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. அவர் மந்திரியானாலும் அவருக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். நீதிதுறை மீது நம்பிக்கை உள்ளது. போராடி வெற்று பெறுவோம். " என்றார்.

அப்துல் சாத்தர், காவித்

இதேபோல ஆசிரியர் தகுதி தேர்வில் நடந்த மோசடியில் சிவசேனா ஷிண்டே அணி எம்.எல்.ஏ. அப்துல் சாத்தரின் 3 மகள்கள் மற்றும் மகனுக்கு தொடர்பு இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரும் நேற்று மந்திரியாக பதவி ஏற்று உள்ளார்.

இதேபோல மந்திரியாக பதவி ஏற்ற பா.ஜனதாவை சேர்ந்த விஜய்குமார் காவித் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஆவார். தேசியவாத காங்கிரசில் இருந்து 2014-ல் பா.ஜனதாவுக்கு வந்த இவர், அதன்பிறகு நடந்த சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

---------------

மேலும் செய்திகள்