< Back
மும்பை
புனேயில் மினி பஸ் பள்ளத்தில் பாய்ந்து டிரைவர் பலி - 4 பேர் படுகாயம்
மும்பை

புனேயில் மினி பஸ் பள்ளத்தில் பாய்ந்து டிரைவர் பலி - 4 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
9 Oct 2023 12:45 AM IST

புனேயில் மினி பஸ் பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் டிரைவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர்

புனே,

புனேவில் உள்ள ஸ்வர்கேட்டில் இருந்து 10 பயணிகளுடன் மினி பஸ் ஒன்று நேற்று இரவு 11 மணி அளவில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் பகுதி நோக்கி புறப்பட்டது. இரவு 2 மணி அளவில் வரந்தா காட் என்ற இடத்தில் உள்ள போர்- மகாத் ரோடு சாலையில் பஸ் சென்றுகொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் மினி பஸ்சின் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மினி பஸ் டிரைவர் அஜிங்கியா சஞ்சய் கோல்டே உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்