< Back
மும்பை
மெட்ரோ ரெயில் சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு
மும்பை

மெட்ரோ ரெயில் சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு

தினத்தந்தி
|
6 Aug 2022 6:25 PM IST

மெட்ரோ ரெயில் சேவை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

மெட்ரோ ரெயில் சேவை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நள்ளிரவு வரை...

மும்பையில் தற்போது காட்கோபர் - வெர்சோவா இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மெட்ரோ ரெயில் சேவை குறைக்கப்பட்டு இருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் மெட்ரோ ரெயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் மெட்ரோ இயக்கப்படும் நேரமும் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ஒன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்ட இருப்பதாவது-

கடைசி ரெயில்

மெட்ரோ ரெயில் சேவை காலை 6.30 மணிக்கு வெர்சோவா, காட்கோபரில் இருந்து தொடங்கப்படும். இதேபோல வெர்சோவாவில் இருந்து இரவு 11.19 மணிக்கும், காட்கோபரில் இருந்து 11.44-க்கும் கடைசி ரெயில் புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்