< Back
மும்பை
மராட்டியம்; கத்தியால் குத்தி ஒருவர் கொலை; 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது...
மும்பை

மராட்டியம்; கத்தியால் குத்தி ஒருவர் கொலை; 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது...

தினத்தந்தி
|
29 Aug 2023 4:10 PM IST

இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்ப்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை நகரின் குர்லா கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சஜித் அலி ஷபிர் குரேஷி. இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருடைய குடும்பத்திற்கும் பக்கத்து குடும்பத்திற்கும் இடையே சிறுசிறு பிரச்சினைகள் எற்பட்டு காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு 10-க்கும் மேற்பட்ட நபர்கள் தீடிரென்று சஜித் அலி ஷபிர் குரேஷியின் வீட்டிற்குள் நுழைந்து அவருடைய குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். மேலும் சஜித் அலியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிய சஜித் அலியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். மேலும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவருடைய சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் 3 பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்