< Back
மும்பை
மும்பை
விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 24 பேரிடம் பணமோசடி செய்தவர் கைது
|19 Oct 2023 12:15 AM IST
விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 24 பேரிடம் பணமோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்
மும்பை,
மும்பையை சேர்ந்த டிரைவர் தீபக் சோலங்கி. இவர் அந்தேரியில் உள்ள வேலைவாய்ப்பு மையத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். விமான நிலையத்தில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக அங்கிருந்த மனோஜ் ராஜ்புத், பெண்களான விதி, அங்கிதா ஆகியோர் வாக்குறுதி அளித்தனர். இதற்காக ரூ.35 ஆயிரத்தை தீபக் சோலங்கியிடம் இருந்து பெற்றனர். ஆனால் வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் 3 பேரும் சேர்ந்து வேலை வாங்கி தருவதாக கூறி 24 பேரிடம் பணமோசடி செய்தது தெரியவந்தது. புகார் பற்றி அறிந்த பெண்கள் விதி, அங்கிதா தலைமறைவாகி விட்டனர். மனோஜ் ராஜ்புத்தை கடந்த 16-ந்தேதி போலீசார் கைது செய்தனர்.