< Back
மும்பை
விமான நிலையத்தில் ரூ.3 கோடி வெளிநாட்டு பணம் கடத்த முயன்றவர் கைது
மும்பை

விமான நிலையத்தில் ரூ.3 கோடி வெளிநாட்டு பணம் கடத்த முயன்றவர் கைது

தினத்தந்தி
|
6 July 2023 12:15 AM IST

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.3 கோடி வெளிநாட்டு பணம் கடத்த முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.3 கோடி வெளிநாட்டு பணம் கடத்த முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

துபாய் விமானம்

மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினல் நம்பர் 2-ம் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் துபாய் செல்லும் விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இந்தியாவை சேர்ந்த ஒரு பயணியின் உடைமைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் வீரர்கள் அதனை பிரித்து பார்த்து சோதனை போட்டனர்.

ரூ.3 கோடி பறிமுதல்

அதில் 14 லட்சத்து 22 ஆயிரத்து 500 மதிப்புள்ள திர்ஹாம் பணநோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இவற்றின் இந்திய மதிப்பு ரூ.3 கோடி ஆகும். அந்த பணத்தை கொண்டு செல்ல ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அதனை கைப்பற்றி சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் வெளிநாட்டு கரன்சியை கடத்தி வந்த பயணியை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்