< Back
மும்பை
கொரோனா பரவலின்போது கிச்சடி வினியோகத்தில் முறைகேடு; உத்தவ் சிவசேனா தலைவரிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை
மும்பை

கொரோனா பரவலின்போது கிச்சடி வினியோகத்தில் முறைகேடு; உத்தவ் சிவசேனா தலைவரிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை

தினத்தந்தி
|
22 Sept 2023 1:00 AM IST

கோவிட் தொற்று பரவலின்போது கிச்சடி விநியோகத்தில் முறைகேடு நடைபெற்ற வழக்கில் உத்தவ் சிவசேனா கட்சி தலைவர்களில் ஒருவரான அமோல் கீர்த்திகரிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியது.

மும்பை,

கோவிட் தொற்று பரவலின்போது கிச்சடி விநியோகத்தில் முறைகேடு நடைபெற்ற வழக்கில் உத்தவ் சிவசேனா கட்சி தலைவர்களில் ஒருவரான அமோல் கீர்த்திகரிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியது.

கிச்சடி வினியோகம்

கொரோனா தொற்று பரவலின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு சேர்த்து தயாரித்த கிச்சடி உணவு வினியோகிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தை மும்பை மாநகராட்சி வழங்கியது. இதில் ரூ.6 கோடியே 37 லட்சம் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கிச்சடி வினியோகிப்பதற்கான ஆர்டரை ஒப்பந்தந்ததாருக்கு வழங்க உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர்களில் ஒருவரான அமோல் கீர்த்திகர் உதவியதாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர்.

5 மணி நேரம் விசாரணை

இது தொடர்பான விசாரணைக்கு ஆஜாராக அமோல் கீர்த்திகருக்கு உத்தரவிட்டப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 11.30 மணி அளவில் மும்பை கிராபர்ட் மார்க்கெட் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜரானார். முறைகேடு தொடர்பாக அவரிடம் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மாதம் இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரேவுக்கு நெருங்கியவராக கருதப்படும் சூரஜ் சவானிடம் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது. அமோல் கீர்த்திகர் முன்னாள் நாடாளுமன்ற எம்.பி. கஜானன் கீர்த்திகரின் மகன் ஆவார். கஜானன் கீர்த்திக்கர் தற்போது முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்