பால்தாக்கரே கொள்கையின்படி மகாவிகாஸ் அகாடி அரசு செயல்படவில்லை- ஷிண்டே அணி மந்திரி குற்றச்சாட்டு
|பால்தாக்கரே கொள்கையின்படி மகாவிகாஸ் அகாடி அரசு செயல்படவில்லை என ஷிண்டே அணி மந்திரி தாதா புசே குற்றம்சாட்டி உள்ளார்.
மும்பை,
பால்தாக்கரே கொள்கையின்படி மகாவிகாஸ் அகாடி அரசு செயல்படவில்லை என ஷிண்டே அணி மந்திரி தாதா புசே குற்றம்சாட்டி உள்ளார்.
ஷிண்டே அணி கூட்டம்
தானே மற்றும் டோம்பிவிலியில் நேற்று ஏக்நாத் ஷிண்டே அணி சார்பில் 'இந்து கர்வா கர்ஜனா சம்பர்கா யாத்ரா' கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மந்திரி தாதா புசே, ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி., தானே முன்னாள் மேயர் நரேஷ் மாஸ்கே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆதரவாளர்கள் இடையே மந்திரி தாதா புசே பேசியதாவது:-
கொள்கைப்படி செயல்படவில்லை
மகாவிகாஸ் அகாடி அரசு 2½ ஆண்டுகளாக சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவின் கொள்கை, போதனையின்படி நடைபெறவில்லை. மகாவிகாஸ் கூட்டணி காரணமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்கட்சிகள் தான் பயன் அடைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவசேனா கடந்த ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி 2 ஆக உடைந்தது. இதில் ஏக்நாத் ஷிண்டே 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரி ஆனார். அவரது மந்திரி சபையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான தாதா புசே மந்திரியாக இருந்து வருகிறார்.