< Back
மும்பை
மராட்டியம்; கண்டெய்னர் கவிழ்ந்து விபத்து; 2 பேர் பலி

image courtesy; ANI

மும்பை

மராட்டியம்; கண்டெய்னர் கவிழ்ந்து விபத்து; 2 பேர் பலி

தினத்தந்தி
|
21 Aug 2023 1:25 PM IST

மும்பை-புனே விரைவு சாலையில் கண்டெய்னர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

மராட்டியம்,

மராட்டிய மாநிலம் மும்பை - புனே விரைவு சாலையில் கண்டெய்னர் ஒன்று வந்தது. அதனை டிரைவர் வேகமாக ஓட்டியுள்ளார். இந்நிலையில் கண்டெய்னர் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கோபோலி பகுதியில் வந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே உள்ள தடுப்புகளில் ஏறி எதிர்பக்கம் சென்ற வாகனங்கள் மீது மோதி கவிழ்ந்தது.

கண்டெய்னர் மோதியதில் 5 கார்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சிக்கி காரில் பயணித்த ஒரு பெண் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்