< Back
மும்பை
மராட்டியத்தில் முகமில்லா ஆர்.டி.ஓ தொடக்கம்- 6 சேவைகளை ஆன்லைனில் பெறலாம்
மாவட்ட செய்திகள்
மும்பை

மராட்டியத்தில் 'முகமில்லா ஆர்.டி.ஓ' தொடக்கம்- 6 சேவைகளை ஆன்லைனில் பெறலாம்

தினத்தந்தி
|
2 Jun 2022 11:28 PM IST

மராட்டியத்தில் முகமில்லா ஆர்.டி.ஓ. தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 சேவைகளை ஆன்லைனில் பெற முடியும்.

மும்பை,

மராட்டியத்தில் முகமில்லா ஆர்.டி.ஓ. தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 சேவைகளை ஆன்லைனில் பெற முடியும்.

6 சேவைகள்

மராட்டிய அரசு 'முகமில்லா ஆர்.டி.ஓ.' சேவையை அறிமுகப்படுத்தியது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களுடன் தொடர்புடைய 6 வசதிகளை பெற உதவும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துறை மந்திரி சதேஜ் பாட்டீல் கூறியதாவது:-

முகமில்லா ஆர்.டி.ஓ. சேவையை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் மூலம் ஆன்லைனில் பெற முடியும். இதன்மூலம் 6 முக்கிய சேவைகளை ஆன்லைனில் பெறலாம்.

இரண்டாம் நிலை பதிவு சான்றிதழ், தடையில்லா சான்றிதழ், பதிவு சான்றிதழ், முகவரி மாற்றம், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தல், உரிமத்தின் முகவரி மாற்றம் மற்றும் உரிமத்தை புதுப்பித்தல் ஆகிய 6 சேவைகள் வழக்கப்படும். வெளிப்படை தன்மையுடன் இது செயல்படும்.

வீட்டில் இருந்தபடி...

மக்கள் வீட்டில் அமர்ந்தப்படி ஆன்லைனில் விண்ணப்பித்து இந்த சேவைகளை பெற முடியும். இதனால் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

விண்ணப்பதாருக்கு தேவையான உரிமங்கள் அல்லது பதிவு சான்றிதழ்கள் தபால் மூலம் அனுப்பப்படும். இதனால் நேரத்தை தவிர, மதிப்புமிக்க காகிதத்தையும் சேமிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்