< Back
மும்பை
மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை; தானே செசன்சு கோர்ட்டு உத்தரவு
மும்பை

மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை; தானே செசன்சு கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
28 Aug 2023 12:30 AM IST

மனைவியின் கள்ளக்காதலனை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே செசன்சு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தானே,

மனைவியின் கள்ளக்காதலனை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே செசன்சு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கள்ளத்தொடர்பு

தானே மாவட்டம் பிவண்டி கானிவிலி பகுதியை சேர்ந்தவர் சிவானந்த் (வயது52). இவரது நண்பர் காந்திவிலியை சேர்ந்த ரவீந்திரா சவான்(45). அடிக்கடி சிவானந்த் வீட்டிற்கு ரவீந்திரா சவான் வந்து சென்றதால் அவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது பற்றி அறிந்த சிவானந்த் மனைவி மற்றும் நண்பரை கண்டித்தார். கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதி இரவு 9.30 மணி அளவில் சிவானந்த் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் ரவீந்திரா சவான் தனது மனைவியுடன் இருப்பதை கண்டு அவருடன் வாக்குவாதம் செய்தார்.

ஆயுள் தண்டனை

இந்த வாக்குவாதம் முற்றியதில் அவர் அங்கிருந்த கோடாரியை எடுத்து ரவீந்திரா சவானை சரமாரியாக தாக்கி கொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி சிவானந்தை கைது செய்தனர். பின்னர் அவர் மீது தானே செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 15 பேர் கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர் மீதான குற்றம் தகுந்த ஆதாரங்களுடன் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீர்ப்பு அளித்த நீதிபதி, குற்றவாளி சிவானந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்