< Back
மும்பை
மும்பை ஆஸ்பத்திரியில் லாலு பிரசாத் யாதவ் 2-வது நாளாக மருத்துவ பரிசோதனை
மும்பை

மும்பை ஆஸ்பத்திரியில் லாலு பிரசாத் யாதவ் 2-வது நாளாக மருத்துவ பரிசோதனை

தினத்தந்தி
|
31 Aug 2023 1:30 AM IST

மும்பை ஆஸ்பத்திரியில் 2-வது நாளாக லாலு பிரசாத் யாதவ் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்

மும்பை,

இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் மும்பையில் குவிந்து வருகின்றனர். இந்த வகையில் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவும் மும்பைக்கு வந்துள்ளார். உடன் அவரது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவும் வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் லாலு பிரசாத் யாதவ் மும்பையில் உள்ள ஆசிய இருதய இன்ஸ்டிடியூட் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவர் வழக்கமான பரிசோதனைக்காக அங்கு வந்ததாக கூறப்பட்டது. இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் அவர் ஆஸ்பத்திரிக்கு வந்ததாக அந்த ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. லாலு பிரசாத் யாதவ் கடந்த 2014-ம் ஆண்டு இதே ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்