< Back
மும்பை
சாலைகளில் 183 குழிகள் தோண்டியதாக லால்பாக் ராஜா கணபதி மண்டலுக்கு ரூ.3.66 லட்சம் அபராதம்
மும்பை

சாலைகளில் 183 குழிகள் தோண்டியதாக லால்பாக் ராஜா கணபதி மண்டலுக்கு ரூ.3.66 லட்சம் அபராதம்

தினத்தந்தி
|
22 Sept 2022 10:00 AM IST

சாலைகளில் 183 குழிகள் தோண்டியதாக லால்பாக் ராஜா கணபதி மண்டலுக்கு ரூ.3.66 லட்சம் அபராதத்தை மாநகராட்சி விதித்தது.

மும்பை,

சாலைகளில் 183 குழிகள் தோண்டியதாக லால்பாக் ராஜா கணபதி மண்டலுக்கு ரூ.3.66 லட்சம் அபராதத்தை மாநகராட்சி விதித்தது.

183 குழிகள்

மும்பையில் கடந்த மாதம் 31-ந்தேதி முதல் கடந்த 9-ந்தேதி வரை 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கான பந்தல்கள் அமைப்பதற்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டது. இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சியினர் கணபதி திருவிழாவின் போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் மும்பையில் பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா கணபதி மண்டலில் 14 அடி உயர சிலை பிரதிஷ்டை செய்ய சாலைகளில் 183 குழிகள் தோண்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

ரூ.3.66 லட்சம் அபராதம்

இதன்படி சட்டவிரோதமாக சாலைகளில் குழிகள் தோண்டியதாக ஒரு குழிக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 66 ஆயிரம் வரையில் மாநகராட்சி லால்பாக் ராஜா கணபதி மண்டலுக்கு அபராதம் விதித்தது.

இதே போல மும்பையில் அமைத்த கணபதி மண்டல்களில் ஒழுங்குமுறைகள் கடைபிடிக்கப்பட்டு உள்ளதா எனவும், குழிகள் தொடர்பாக ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சியினர் தெரிவித்தனர்.

கணபதி திருவிழாவின் போது லால்பாக் ராஜா கணபதி மண்டலுக்கு ரூ.5 கோடிக்கும் அதிகமான நகைகள், பணம் போன்றவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்