< Back
மும்பை
மும்பை
ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - துப்புரவு தொழிலாளி கைது
|10 Oct 2023 1:30 AM IST
ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டார்
மும்பை,
மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது அறையை சுத்தம் செய்வதற்காக 40 வயது துப்புரவு தொழிலாளி ஒருவர் சென்றார். அப்போது அந்த ஆசாமி திடீரென சிகிச்சையில் இருந்த சிறுமியை தவறான முறையில் தொட்டதோடு, முத்தமிட்டு மானபங்கம் செய்தார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கூச்சலிட்டனர். உடனே ஆஸ்பத்திரி ஊழியர்கள் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் துப்புரவு தொழிலாளியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த சிறுமிக்கு துப்புரவு தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.