< Back
மும்பை
நகைக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திய ஆசாமிக்கு வலைவீச்சு
மாவட்ட செய்திகள்
மும்பை

நகைக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திய ஆசாமிக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
19 May 2022 6:14 PM IST

டோம்பிவிலியில் நகைக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திய ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தானே,

டோம்பிவிலியை சேர்ந்தவர் மன்னா தாராக்நாத் (வயது50). இவர் அப்பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை கடையில் இருந்த போது அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவர் கடைக்குள் புகுந்தார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் மன்னா தாராக்நாத் கழுத்தில் குத்தினார். அப்போது தடுக்க முயன்ற நகைக்கடை உரிமையாளர் கையிலும் கத்தி குத்து விழுந்தது. இதன்பின்னர் ஆசாமி நகைகள் எதையும் எடுக்காமல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

கத்தி குத்தில் காயமடைந்த மன்னா தாரக்நாத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். நகை கொள்ளை சம்பவம் எதுவும் நடைபெறாததால் முன்விரோதம் காரணமாக அவரை கொல்ல முயன்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற ஆசாமியை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்