< Back
மும்பை
ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.55 லட்சம் நகைகள் கொள்ளை
மாவட்ட செய்திகள்
மும்பை

ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.55 லட்சம் நகைகள் கொள்ளை

தினத்தந்தி
|
28 May 2022 5:50 PM IST

புலேஷ்வர் சாலையில் ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.55 லட்சம் நகைகளை கொள்ளையடித்த 2 பேரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

புலேஷ்வர் சாலையில் ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.55 லட்சம் நகைகளை கொள்ளையடித்த 2 பேரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.55 லட்சம் நகைகள்

மும்பை ஜவேரி பஜாரில் உள்ள நகைக்கடையில் 35 வயது ஊழியர் ஒருவர் கடந்த 5 ஆண்டாக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 7.30 மணி அளவில் நகைக்கடை உரிமையாளர் தனது அலுவலகத்தில் இருந்த ஊழியரிடம் ரூ.55 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொடுத்து கடைக்கு கொண்டு செல்லும் படி கொடுத்து அனுப்பி உள்ளார். இதனை ஊழியர் பெற்று கொண்டு கடைக்கு செல்ல புலேஷ்வர் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து நகைகள் அடங்கிய பையை தருமாறு கத்தியை காட்டி மிரட்டினர்.

வலைவீச்சு

இதற்கு மறுத்த ஊழியரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். அது கண்ணில் பட்டதால் எரிச்சல் தாங்க முடியாமல் அலறினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய 2 பேரும் நகைகள் அடங்கிய பையை பறித்து கொண்டு தப்பி சென்றனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஊழியரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நகைப்பையை பறித்து சென்ற ஆசாமிகளை பிடிக்க கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்