< Back
மும்பை
கவச உடைகள் வாங்கியதில் முறைகேடு: மாநகராட்சி துணை கமிஷனரிடம் போலீஸ் விசாரணை
மும்பை

கவச உடைகள் வாங்கியதில் முறைகேடு: மாநகராட்சி துணை கமிஷனரிடம் போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
27 Aug 2023 12:15 AM IST

கொரோனா பரவலின் போது கவச உடைகள் (பாடி பேக்) வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக மும்பை மாநகராட்சி துணை கமிஷனரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மும்பை,

கொரோனா பரவலின் போது கவச உடைகள் (பாடி பேக்) வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக மும்பை மாநகராட்சி துணை கமிஷனரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கவச உடைகள்

கொரோனா பரவலின் போது மும்பை மாநகராட்சி சார்பில் அதிக விலை கொடுத்து கவச உடைகள் (பாடி பேக்) வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கவச உடைகள் (பாடி பேக்) வாங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு புகார் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேக்கர், மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

துணை கமிஷனரிடம் விசாரணை

இந்தநிலையில் கவச உடைகள் (பாடி பேக்) வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான புகார் குறித்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மும்பை மாநகராட்சி துணை கமிஷனர் ரமாகாந்த் பிராதருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் நேற்று காலை 11 மணியளவில் அவர் விசாரணைக்காக தென்மும்பை, மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் கவச உடைகள் (பாடி பேக்) வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரமாகாந்த் பிராதர் கொரோனா பரவலின் போது மும்பை மாநகராட்சி மைய கொள்முதல் துறை பொறுப்பாளராக இருந்தார். கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் இவரிடம் விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்