< Back
மும்பை
லஞ்ச புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சவுரப் திவாரி உளவுப்பிரிவு துணை கமிஷனராக நியமனம்
மும்பை

லஞ்ச புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சவுரப் திவாரி உளவுப்பிரிவு துணை கமிஷனராக நியமனம்

தினத்தந்தி
|
29 Aug 2023 12:45 AM IST

லஞ்ச புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சவுரப் திவாரி உளவுப்பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

லஞ்ச புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சவுரப் திவாரி உளவுப்பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லஞ்ச புகாரில் இடைநீக்கம்

மும்பையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பெரிய தொகை, தங்கம் மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை எடுத்து செல்ல அங்காடியா என அழைக்கப்படும் பாரம்பரிய கூரியர் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த அங்காடியாக்களிடம் இருந்து மாதந்தோறும் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் மும்பை போலீஸ் துணை கமிஷனர் சவுரப் திவாரி கடந்த ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அங்காடியாக்களிடம் இருந்து பணம் பறித்த புகாரில் 3 போலீஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

உளவுப்பிரிவில் பணி

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் ஐ.பி.எஸ். அதிகாரியான சவுரப் திவாரி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பதவி எதுவும் ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் மாநில அரசு அவரை மாநில உளவுப்பிரிவு துணை கமிஷனராக நியமித்து உள்ளது. இதுதொடர்பான உத்தரவை மாநில உள்துறை பிறப்பித்து உள்ளது. ஊழல் புகாரில் சிக்கிய ஐ.பி.எஸ். அதிகாரி மாநில உளவுப்பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்