மாவட்ட செய்திகள்
இந்தியாவில் பணவீக்கத்தால் குற்ற உணர்ச்சி தேவையில்லை -பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேச்சு
|பணவீக்கம் அதிகரிப்பதால் குற்ற உணர்ச்சி தேவையில்லை என பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.
புனே,
பணவீக்கம் அதிகரிப்பதால் குற்ற உணர்ச்சி தேவையில்லை என பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.
பட்டமளிப்பு விழா
புனேயில் பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிகரித்து வரும் பணவீக்கம் பற்றி விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. கொரோனா தொற்றுநோய் பாதிப்பின்போது, ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஸ்தம்பித்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, தனது விவேகத்தால் பொருளாதாரம் மோசமான நிலைக்கு செல்லாதபடி பார்த்துக்கொண்டார். இதற்காக நாம் அவரை பாராட்ட வேண்டும்.
ரஷியா- உக்ரைன் போர் நெருக்கடி காரணமாக உலகளாவிய வினியோக சங்கிலி சீர்குலைந்துள்ளது. இதனால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளன.
அமெரிக்கா நெருக்கடி
இந்த சூழ்நிலை எந்த நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது. பணக்கார நாடான அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
குறைந்தபட்சம் இந்தியா அதைவிட சிறப்பாக உள்ளது. எனவே நாம் குற்ற உணர்வுக்கு ஆளாக வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் சில்லறை விற்பனை பணவீக்கம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.8 சதவீதமாக உயர்ந்து உள்ளது. மொத்த விற்பனை பணவீக்கம் 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 15.1 சதவீதத்தை எட்டி இருக்கிறது.