மும்பை, புனே உள்ளிட்ட 10 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
|முன்னாள் போலீஸ் கமிஷனர் தொடர்புடைய போன் ஒட்டு கேட்பு வழக்கில் மும்பை, புனே உள்ளிட்ட 10 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
மும்பை,
முன்னாள் போலீஸ் கமிஷனர் தொடர்புடைய போன் ஒட்டு கேட்பு வழக்கில் மும்பை, புனே உள்ளிட்ட 10 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
போன் ஒட்டு கேட்பு வழக்கு
மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த புகாரின் பேரில் சமீபத்தில் சி.பி.ஐ. தேசிய பங்கு சந்தை ஊழியர்களின் போன் ஒட்டு கேட்கப்பட்ட வழக்கில் தேசிய பங்கு சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர்கள் சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நரைன் மற்றும் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
10 இடங்களில் சோதனை
சஞ்சய் பாண்டே சம்மந்தப்பட்ட ஐசெக் செக்யுரிட்டிஸ் என்ற நிறுவனம் தேசிய பங்கு சந்தையின் தணிக்கை பாதுகாப்பை மேற்கொண்டதாகவும், இதில் 2009-ல் இருந்து 2017-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அந்த நிறுவனம் சட்டவிரோதமாக தேசிய பங்கு சந்தை ஊழியர்களின் போனை ஓட்டு கேட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று சி.பி.ஐ. மும்பை, புனே உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தியது. மும்பையில் சஞ்சய் பாண்டேவின் அலுவலகம், வீட்டில் சோதனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.