மனைவியை கொன்று புதைத்த கணவர் கைது- உடந்தையாக இருந்த 2 பேரும் சிக்கினர்
|நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் மனைவியை கொன்று குழிதோண்டி புதைத்த கணவரையும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ராய்காட்,
நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் மனைவியை கொன்று குழிதோண்டி புதைத்த கணவரையும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நடத்தையில் சந்தேகம்
நவிமும்பை அருகே உரண் பகுதியை சேர்ந்தவர் சமாதான் (வயது35). இவரது மனைவி விஜயா (34).
விஜயாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்துவிட்டார். இதையடுத்து அவர் இரண்டாவதாக சமாதானை கடந்த 4 ஆண்டுக்கு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் விஜயாவின் நடத்தையில் சமாதானுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சமாதான் தனது மனைவியை கொல்ல திட்டமிட்டார். இதன்படி சம்பவத்தன்று சமாதான் மனைவி விஜயாவை அதிகளவு மது குடிக்க வைத்தார்.
3 பேர் கைது
பின்னர் போதையில் இருந்த அவரை ஜம்புல்பாடாவில் உள்ள குளத்தில் மூழ்கடித்து கொலை செய்தார்.
2 நாட்கள் கழித்து உடல் குளத்தில் மிதந்தது. இதையடுத்து சமாதான் தனது தம்பி நன்னாத், நண்பர் கஜானன் ஆகியோரின் உதவியுடன் விஜயாவின் உடலை குளத்தில் இருந்து மீட்டு குழி தோண்டி புதைத்தனர். இந்த நிலையில் விஜயா மாயமானது குறித்து அவரது உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதன்பேரில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கணவர் சமாதான் உள்பட 3 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.