< Back
மும்பை
குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் நடனமாட மறுத்த கணவன்-மனைவிக்கு கத்திக்குத்து - பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல்
மும்பை

குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் நடனமாட மறுத்த கணவன்-மனைவிக்கு கத்திக்குத்து - பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல்

தினத்தந்தி
|
22 Aug 2023 1:00 AM IST

குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் நடனமாட மறுத்த கணவன்-மனைவியை கத்தியால் குத்தி பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயலில் ஈடுபட்டார்.

நாக்பூர்,

குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் நடனமாட மறுத்த கணவன்-மனைவியை கத்தியால் குத்தி பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயலில் ஈடுபட்டார்.

நடனமாட மறுப்பு

நாக்பூர் மாவட்டம் கர்சோலி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் சுபாஷ்ராவ் பாட்டீல்(வயது45). இவரது வீட்டில் சம்பவத்தன்று குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பக்கத்து வீட்டை சேர்ந்த சுக்தியோ உய்கே(55) மற்றும் அவரது மனைவி ரேகா(50) ஆகியோரும் கலந்துகொண்டனர். விழாவில் ஒரு பகுதியாக இசை கச்சேரி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியின்போது சுபாஸ்ராவ் பாட்டீல், உய்கேவிடம் தன்னுடன் நடனமாட வற்புறுத்தினார். ஆனால் அவர் நடனமாட மறுத்துவிட்டதாக தெரிகிறது. பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளர் வேண்டுகோளை ஏற்று உய்கே நடனமாட தொடங்கினார். தான் அழைத்த போது நடனமாட வர மறுத்த நிலையில் அவரது செய்கை சுபாஷ்ராவ் பாட்டீலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

கத்திக்குத்து

அவர் உய்கேவை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். இதனால் உய்கே தனது மனைவி ரேகாவுடன் விழாவில் இருந்து வெளியேற முயன்றார். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்திய சுபாஷ்ராவ் பாட்டீல் இருவரையும் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் குத்தி காயப்படுத்தினர். இதில் உயிருக்கு போராடிய 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தினேஷ் சுபாஷ்ராவ் பாட்டீல் மீது போலீசார் கொலை முயற்சி மற்றும் ஆபத்தான ஆயுதங்களால் காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்