< Back
மும்பை
வாட்ஸ்அப் மூலம் விபசாரம் நடத்திய கணவன்-மனைவி கைது
மும்பை

வாட்ஸ்அப் மூலம் விபசாரம் நடத்திய கணவன்-மனைவி கைது

தினத்தந்தி
|
14 Oct 2023 1:00 AM IST

காஷிமிரா ஹட்கேஷ் பகுதியில் வாட்ஸ்அப் மூலம் விபச்சாரம் நடத்தி வந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்

தானே,

தானே மாவட்டம் காஷிமிரா ஹட்கேஷ் பகுதியில் விபசாரம் நடந்து வருவதாக ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின்படி போலீசார் அப்பகுதிக்கு போலி வாடிக்கையாளர் ஒருவரை அனுப்பி விசாரணை நடத்தினர். இதில் ஒரு தம்பதி வாடிக்கையாளரிடம் நடனஷோ நடப்பதாக கூறி பெண்களின் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைப்பர். பின்னர் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் பெண்களை கோவா, பெங்களூரூ, லோனாவாலா, மும்பை, தானே, மிராபயந்தர் பகுதிகளுக்கு அனுப்பி விபசார தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு முகமது ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி ஜோதி என்ற ரேகான் சுல்தானா ஆகிய 2 பேரை பிடித்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்