< Back
மும்பை
தஹி ஹண்டிக்கு அரசு விடுமுறை- ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு
மும்பை

தஹி ஹண்டிக்கு அரசு விடுமுறை- ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

தினத்தந்தி
|
30 July 2022 6:13 PM IST

தஹி ஹண்டி தினத்தில் அரசு விடுமுறை விடப்படும் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

மும்பை,

தஹி ஹண்டி தினத்தில் அரசு விடுமுறை விடப்படும் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

தஹி ஹண்டி

மராட்டியத்தில் தஹி ஹண்டி திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மும்பை, தானேயில் தஹி ஹண்டி கொண்டாட்டம் களைக்கட்டும். எனவே ஆண்டு தோறும் மும்பை பெருநகரப்பகுதியில் தஹி ஹண்டிக்கு அரசு விடுமுறை விடப்படும். இதேபோல மாநிலத்தின் ஒரு சில பகுதிகளிலும் மாவட்ட கலெக்டர்கள் பொது விடுமுறை அறிவிப்பை வெளியிடுவார்கள்.

இந்த ஆண்டு ஏற்கனவே சில மாவட்டங்களில் கலெக்டர்கள் தஹி ஹண்டிக்கு விடுமுறை அறிவித்து உள்ளனர்.

மாநிலம் முழுவதும்...

இந்தநிலையில் தஹி ஹண்டிக்கு மாநில முழுவதும் அரசு விடுமுறை விடப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார். இதுதொடர்பான உத்தரவுபிறப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " தஹி ஹண்டி மாநிலத்தில் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்து உள்ளதால் இந்த ஆண்டு தஹி ஹண்டி பெரிய அளவில் கொண்டாடப்படும். அதை கருத்தில் கொண்டு தஹி ஹண்டிக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை விடப்படப்பட உள்ளது " என்றார்.

இந்த ஆண்டு தஹி ஹண்டி திருவிழா ஆகஸ்ட் 19-ந் தேதி கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்