< Back
மும்பை
தானேயில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் கப்பல் ஊழியர் உள்பட 3 பேர் கைது
மும்பை

தானேயில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் கப்பல் ஊழியர் உள்பட 3 பேர் கைது

தினத்தந்தி
|
28 Aug 2022 9:06 PM IST

தானேயில் 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கப்பல் ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தானே,

தானேயில் 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கப்பல் ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறுமி கற்பழிப்பு

தானே வாக்ளே எஸ்டேட் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழகி வந்து உள்ளார். சம்பவத்தன்று சிறுமியை வாலிபர் பிவண்டி, கால்கர் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிட வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு வாலிபர் நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து சிறுமியை மானபங்கம் செய்தனர். இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்தாள்.

இதையடுத்து அவர்கள் சிறுமியின் கைகளை கட்டி வைத்து கற்பழித்தனர். மேலும் அவர்கள் சிறுமியை அடித்து, கடித்து துன்புறுத்தி உள்ளனர்.

3 பேர் கைது

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் சிட்டால்சர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வணிக கப்பல் ஊழியர் அகாஷ் கனோஜியா, சச்சின் காம்ளே (30), அசு (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். சச்சின் காம்ளே மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் கூறினர்.

16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தானேயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்