< Back
மும்பை
மாவட்ட செய்திகள்
மும்பை
வாலிபரை கொலை செய்த நண்பர்கள் கைது
|10 Jun 2022 6:07 PM IST
பிறந்தநாள் விருந்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபரை கொலை செய்த நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
முல்லுண்டு பகுதியை சோ்ந்தவர் நிலேஷ் சால்வி (வயது28). இவர் நேற்று இரவு முல்லுண்டு கவுசாலா ரோட்டில் உள்ள மைதானத்தில் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் நண்பர்கள் ஜாவித்கான், பாவேஷ் தோா்தேவுடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நண்பர்கள் நிலேஷ் சால்வியை கத்தியால் குத்தினர். அக்கம் பக்கத்தினர் வாலிபரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிறந்தநாள் விருந்தில் வாலிபரை கொலை செய்த நண்பர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.