< Back
மும்பை
முதியவரிடம் ரூ.17 லட்சம் அபேஸ் - 4 பேருக்கு வலைவீச்சு
மும்பை

முதியவரிடம் ரூ.17 லட்சம் அபேஸ் - 4 பேருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
20 Aug 2023 1:30 AM IST

நவிமும்பையில் முதியவரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறன்ர்

தானே,

நவிமும்பையை சேர்ந்த 66 வயதுடைய முதியவருக்கு அண்மையில் ஆன்லைன் வணிக நிறுவனத்தில் பிரதிநிதிகள் என கூறி 4 பேர் வெவ்வேறு தினங்களில் தொடர்பு கொண்டனர். அவர்கள் சமூக வலைதளத்தில் பல்வேறு நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களை விளம்பரங்களை பதிவேற்றம் செய்யும் பணி வாங்கி தருவதாக கூறினர். இதற்காக மாத ஊதியம் தருவதாக தெரிவித்தனர். ஆனால் அதற்கு முன்பணம் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை நம்பிய முதியவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையில் பல தவணைகளில் மொத்தம் ரூ.17 லட்சத்தை செலுத்தினார். ஆனால் வேலை கிடைக்காமல் போனதால் தான் ஏமாற்றப்பட்டதை முதியவர் உணர்ந்தார். இது பற்றி அவர் நெரூல் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்