< Back
மும்பை
நர்சிங் படிப்பு கற்று தருவதாக மோசடி; தனியார் கல்வி நிறுவன இயக்குனர்கள் மீது வழக்குப்பதிவு
மும்பை

நர்சிங் படிப்பு கற்று தருவதாக மோசடி; தனியார் கல்வி நிறுவன இயக்குனர்கள் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
9 Oct 2023 8:00 PM GMT

நர்சிங் படிப்பு கற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட தனியார் கல்வி நிறுவன இயக்குனர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்

தானே,

தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாணவிகள் சிலர் சேர்ந்தனர். அவர்கள் பொது நர்சிங் படிப்பில் சேர்ந்து அதற்கான கல்வி கட்டணத்தையும் கட்டினர். இந்தநிலையில் படிப்பை முடித்த பிறகு கல்வி நிறுவனம் மாணவிகளுக்கு நர்சிங் படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் வழங்காமல், நோயாளிகள் பராமரிப்புக்கான டிப்ளமோ சான்றிதழை வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்யாண் எம்.எப்.சி. போலீசில் புகார் அளித்தனர். புகாரில் தனியாா் கல்வி நிறுவனம் 36 மாணவிகளிடம் இருந்து ரூ.52.21 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் குறித்து போலீசார் கல்வி நிறுவன இயக்குனர்கள் 2 பேர் மற்றும் ஒரு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்