< Back
மும்பை
எம்.பி.பி.எஸ். சீட் தருவதாக மோசடி செய்த கல்வி நிறுவன முன்னாள் நிர்வாகி கைது- அமலாக்கத்துறை நடவடிக்கை
மாவட்ட செய்திகள்
மும்பை

எம்.பி.பி.எஸ். சீட் தருவதாக மோசடி செய்த கல்வி நிறுவன முன்னாள் நிர்வாகி கைது- அமலாக்கத்துறை நடவடிக்கை

தினத்தந்தி
|
18 Jun 2022 2:43 PM GMT

எம்.பி.பி.எஸ். சீட் தருவதாக மோசடி செய்த கல்வி நிறுவன முன்னாள் நிர்வாகியை கைது செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பை,

கோலாப்பூரில் சத்ரபதி சிவாஜி கல்வி அறக்கட்டளை நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் இன்ஸ்டியுட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அன்டு ரிசர்ச் என்ற கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 2014-15 ஆண்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாணவர்களை சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டது.

எனினும் கல்வி நிறுவனம் எம்.பி.பி.எஸ். சீட் தருவதாக 350 மாணவர்களிடம் ரூ.29 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக சத்தாரா போலீசார் கல்வி நிறுவன தலைவர் மகாதேவ் தேஷ்முக் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தது.

இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மகாதேவ் தேஷ்முக்கை கடந்த மாதம் கைது செய்தது. தற்போது அவர் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கல்வி நிறுவன முன்னாள் பொருளாளரும், மகாதேவ் தேஷ்முக்கின் சகோதருமான அப்பாசாகிப் ராமசந்திர தேஷ்முக்கையும் அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. அவரை வருகிற 24-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி உள்ளது. மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணம் அப்பாசாகிப் ராமசந்திர தேஷ்முக் மற்றும் குடும்பத்தினரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்